Show all

தங்கள் காலனிய தேவைக்காக பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்டவை நம்சட்டங்கள்: பிரணாப்முகர்ஜி

 

தங்கள் காலனிய தேவைக்காக பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்டவை நம்சட்டங்கள்: பிரணாப்முகர்ஜி

 

     தேசத்துரோக வழக்கு பற்றி தொடர்ந்து விவாதம் எழுந்து வரும் நிலையில், இந்திய  தண்டனைச்சட்டம் முழுமையாக மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 

கேரளா மாநிலம் கொச்சியில் ஐபிசி யின் 155வது  ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,

கடந்த 155 ஆண்டுகளில் இந்தியத் தண்டனைச்சட்டத்தில் ஒரு சில மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. தண்டனைக்குரிய குற்றங்களின் தொடக்க பட்டியலில் வெகுசில குற்றங்களே சேர்க்கப்பட்டுள்ளன.  தண்டனை சட்டத்தில் குற்றங்களாக தற்போது உள்ளவை  தங்கள் காலனிய தேவைக்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்டவை.

முறையாக வரையறுக்கப்பட்ட  பல புதிய குற்றங்கள் தண்டனைச்சட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

 

ஒரு சட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற முன்மாதிரியாகவே இந்திய குற்றவியல் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காலத்திற்கு ஏற்றாற் போல் பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

 

     இத்தகைய திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் உறுதுணையாக அமையும்.

தற்போதுள்ள அனைத்து குற்றங்களையும் குற்றவியல் சட்டத்தில் சேர்ப்பது என்பது மிக சவாலான விஷயம்.

21 ஆம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்திய தண்டனைச்சட்டத்தை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.