Show all

கச்சதீவு சர்ச் திருவிழாவுக்கு நாட்டு படகில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை

கச்சதீவு சர்ச் திருவிழாவுக்கு நாட்டு படகில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராமபிரதீபன் தெரிவித்தார்.

பிப்., 20, 21 நாட்களில் கச்சதீவு அந்தோணியார் சர்ச் திருவிழா நடக்கிறது. இதில் இந்திய, இலங்கை கிறிஸ்தவர்கள் பங்கேற்க உள்ளனர். பிப்., 20ல் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் புறப்பட்டு, கச்சதீவு செல்கின்றனர். பிப்., 21ல் திருவிழா முடிந்ததும் அன்று ராமேஸ்வரம் திரும்புவார்கள்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று, ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., ராமபிரதீபன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ராமேஸ்வரம் டி.எஸ்.பி., முத்துராமலிங்கம், தாசில்தார் கங்கா, இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், அமுதசெல்வி, துணை தாசில்தார் ஜபார், இந்திய கடற்படை அதிகாரிகள், மீன்துறை அதிகாரிகள், நடுவண், மாநில உளவு பிரிவு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

ஆர்.டி.ஓ., கூறியதாவது:

கச்சதீவுக்கு செல்லும் பக்தர்கள் புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இலங்கை அகதிகள் மற்றும் நாட்டுபடகில் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை. மீறினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநில, வெளியூர் அரசு ஊழியர்கள் அந்தந்த துறை அதிகாரிகள், போலீசாரிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி வரவேண்டும். அரசு தடை விதித்த மின்னணுவியல் பொருள்கள், நிழற்படகருவிகள, மது, பீடி, சிகரெட், பான்பராக் ஆகியவற்றை கொண்டு செல்லக் கூடாது. கச்சதீவுக்குப் படகுகள் இயக்க மீனவர் சங்க பிரதிநிதியிடம் மீன்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர், என்றார்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.