Show all

தோனிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீதான வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

 ஹிந்துக் கடவுளான மகா விஷ்ணுவை அவமதிக்கும் வகையில் தோனியின் படம் பத்திரிகை அட்டை ஒன்றில் வெளியானதை யடுத்து அவர் மீது பஞ்சாப், ஆந்திரம் உள்ளிட்ட மாநில நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

 

 ஆந்திர மாநில நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், அனந்தப்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்கள+ருக்கு வழக்கு விசாரணையை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தோனி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

 இந்த மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் வௌ;ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தோனி மீதான காவல்துறையினரின் குற்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் 8 வாரங்கள் தடை விதித்தது. வழக்கை மாற்றக்கோரியுள்ள தோனியின் மனு குறித்து பதிலளிக்குமாறு அனந்தபுரியில் வழக்குத் தொடர்ந்த ஷியாம் சுந்தருக்கு அறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.