Show all

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, வேட்பாளர்களுக்கு புதிய வழிமுறைகளை வகுக்க உத்தரவிட்டார். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். குற்றப்பின்னணி உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கூடாது என்று உள்ளாட்சி தேர்தலை நடத்த புதிய அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு தரக்கோரி தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவுற்றிருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவிற்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.