Show all

கமலின் திறமை அடித்தட்டு மக்களுக்கே புரியும்! மேல்தட்டு மக்களால் எடை போட முடியாது

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தீவிர அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். ஏற்கெனவே ஒருமுறை கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கமலை பேசியில் அழைத்தார்.

     கொல்கத்தா சென்ற கமலிடம், ‘நீங்கள் எங்கள் மாநிலத்துக்கு வருகை தந்ததும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும்  பெருமையாக இருக்கிறதுஎன்று மம்தா பேசினார். அதோடு நில்லாமல் நிகழ்ச்சி முடிந்து காருக்கு செல்லும்வரை கமலுடன் சென்று கார் கதவைத் திறந்து மகிழ்ச்சியாக வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வை கமல்ஹாசனே நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்து இருக்கிறார்.

     ஏற்கெனவே கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து அரசியல் ஆலோசனைகளை பெற்றார். அதன்பிறகே தற்போது அரசியலில் புதுக்கட்சித் தொடங்கியிருக்கும் பணியில் பரபரப்பாக இறங்கி இருக்கிறார்.

     முன்பு இந்திய திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் நடிகராக மம்தா பானர்ஜியை சந்தித்தார். புதிதாக அரசியலில் களமிறங்கி உள்ளதால் அரசியல் கட்சியில் செயல்பாடுகள ;குறித்து ஆலோசனை செய்வதற்காக கொல்கத்தா சென்றிருக்கிறார் கமல்.

     முதலில் மாநிலத்தில் உள்ள எடப்பாடி அரசை மட்டும் விமர்சித்து வந்தார். அடுத்து அண்டை மாநிலமான கேரளா சென்று கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயியைச் சந்தித்தார். அடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கமலின் வீடு தேடிவந்து சந்தித்தார்.

இப்போது பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்துவரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்கப் போயிருக்கிறார்.

     கமலின் நோக்கமும், நகர்த்தல்களும், திறமையும் அடித்தட்டு மக்களுக்கே புரியும்! மேல்தட்டு அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் எடை போட முடியாது!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,602

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.