Show all

மோடி, காங்கிரஸ் இல்லாத, தமிழக அரசியல் மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் நடுவண் அரசுக்கு முயலும் கமல்!

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவு மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் முதுமை ஆகியவற்றின் காரணமாகத் தமிழக அரசியல் தற்போது சூடுபிடித்துள்ளது.

நடிகர் கமல் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல்ஹாசன் சந்தித்துப்பேசினார்.

அடுத்து, ஆளும் கட்சிக்கு எதிராகப் பல கருத்துகளைத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். அண்மையில், நற்பணி இயக்கத்தினர் தன்னுடன் தொடர்பில் இருக்கும் வகையில் ‘மய்யம் விசில்;’ என்ற செயலியை நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். மேலும், கட்சியை உடனடியாகத் தொடங்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க கமல்ஹாசன் கொல்கத்தா செல்கிறார். காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த கமல்ஹாசன் விமானம் மூலம் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார். மம்தாவை எதற்காகச் சந்திக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. மாநில முதல்வர்களை கமல்ஹாசன் சந்தித்து வருவது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்தினால் போதாது; நடுவண் அரசிலும் மாற்றம் வந்தால் மட்டுமே தமிழக மாற்றத்தை நிலை நிறுத்த முடியும். மோடியோ காங்கிரசோ நடுவண் ஆட்சியில் அமைந்தால், தமிழகத்திற்கு முழுமனதோடு நன்மை செய்வதற்கான கட்சி என்று தெரிந்து கொண்டால் வாதம், வம்பு, வழக்குகளில் சிக்க வைத்து அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதை கமல் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்.

எனவேதான் தமிழகத்தில் தமிழர் நன்மை விரும்பும் கட்சிகளோடு (திருமாவளவன், வைகோ போன்றவர்கள்) கூட்டிணைந்து கமல் ஆட்சி!

நடுவண் அரசில் மாநிலக் கட்சிகளின் (மம்தா, கெஜ்ரிவால், பினராயி விஜயன் போன்றவர்ளை ஒருங்கிணைத்த) கூட்டாட்சி என்கிற கோணத்தில் மிகப் பொறுமையாக காய் நகர்த்தி வருகிறார். உறுதியாக கமலின் எண்ணம் நிறைவேறும்; நிறைவேறிட வாழ்த்துக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,602

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.