Show all

கதைத்தலைவர் தினகரன் கிளியை இன்று காலை 10.30 மணிக்கு கைப்பற்றுகிறார்.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில் சென்ற ஆண்டு, சசிகலா அவர்களைத் தமிழக முதல்வராக்கும் முயற்சி முன்னெடுக்கப் பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து பன்னீர் அணி பிரிந்து அதிமுகவிற்கு எதிராக நின்றது. சசிகலா அணியால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய பெற்றது. 

இந்த நிலையில், 1.சசிகலாவை சிறைக்கு அனுப்பவும், 2.சசிகலா அணி பேராளர் தினகரனை அதிமுகவிலிருந்து கழட்டி விடவும்,  3.அதிமுகவிற்கு எதிராக நின்ற பன்னீர் செல்வத்தை ஆட்சியில் இணைத்துக் கொள்ளவும், 4.தினகரன் அணி 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதியிழக்கச் செய்து, தகுதியிழப்பால், அதிமுகவின் தனிப்பெரும்பான்மை குறைந்த நிலையில், தகுதியிழப்பிற்கு ஆதரவு அல்லது எதிரான எந்தத் தீர்ப்பிலும், ஆட்சி இழப்பு உறுதி யெனும், தீர்ப்பில் அடங்கி விட்ட எடப்பாடி- பன்னீர் கூட்டணி ஆட்சி உயிர் நிலையை-

அந்தக் கால மாயஜாலக் கதைகளில் வரும் மந்திரவாதியின் உயிர் ஏழுமலை, ஏழுகடலுக்கப்பால் ஒரு கிளியின் கழுத்தில் இருப்பதானவாறு தகுதியிழப்பு குறித்த தீர்ப்பு அதிமுகவின் உயிர் நிலையாக இருந்து எடப்பாடி-பன்னீர் ஆட்சி பாஜகவால் காப்பாற்றப் பட்டு வந்தது. 

கதைத்தலைவர் தினகரன்! எடப்பாடி- பன்னீர் ஆட்சி உயிர்நிலையை பாஜக: '18சட்டமன்ற உறுப்பினர் தீர்ப்பில்' வைத்திருப்பதை கண்டு கொண்டு ஒருவழியாக கிளி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து வந்து விட்டார். தனது குடும்பத்தார் தனது தோல்விக்கு பகடைக்காயாகி விடக் கூடாது என்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்களை குற்றாலத்தில் ஒளித்து வைத்து விட்டார். இன்று காலை 10.30 மணிக்கு கிளியை கதைத் தலைவர் தினகரன் கைப்பற்றுவார்.   

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அவைத்தலைவர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை அறங்கூற்றுவர் இந்திரா பானர்ஜி, அறங்கூற்றுவர் எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது அறங்கூற்றுவர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

அதன்படி மூன்றாவது அறங்கூற்றுவரான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.