Show all

ஹிந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். தீபாவளி பட்டாசு வெடிப்பு தீர்ப்பு குறித்து பாஜக பா.உ

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் செவ்வாய்க் கிழமையன்று தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சிந்தாமணி மாளவியா, 'நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்' என தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் தீபாவளியை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூசை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். ஹிந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். ஹிந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே ஹிந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, ஹிந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை. இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார்.

முகலாயர்கள் ஆட்சியின் போது எனறு குறிப்பிட்டு, தற்போதைய பாஜக ஆட்சியிலேயே பாஜகவின் கொள்கையான ஹிந்துத்துவாவிற்கு மரியாதை இல்லை யென்கிறாரா?  அல்லது தற்போது நடப்பது உச்சஅறங்கூற்று மன்ற ஆட்சி என்று முறையிடுகிறாரா? 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,951.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.