Show all

ஓகி பாதிப்புகளை காண, ஒருவழியாக கிளம்பிவிட்டார் முதல்வர் பழனிசாமி; குமரி பயணம்

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை இன்று முதல்வர் பழனிசாமி பார்வையிடவுள்ளார்.

தமிழகத்தில் ஓகி புயலால், பல தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும், கன்னியாகுமரி மாவட்டமே அதிகப்படியான இழப்புகளை சந்தித்தது.

இந்நிலையில் இந்த பாதிப்புகளை காண தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கன்னியாகுமரி செல்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் அங்கிருந்து சாலை வழியாக குமரி செல்லவுள்ளார்.

முன்னதாக புயல் சேதத்தை பார்வையிடாத முதல்வருக்கு குமரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை முதல்வர் பார்வையிடவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,634

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.