Show all

இலங்கை கடற்படை தொந்தரவு, இல்லாவிடில் நல்லா மீன் பிடிக்கலாம்: 13நாட்களுக்கு பின் கடல்செல்லும் மீனவர்கள்

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: புயலுக்கு பிறகு தடை நீக்கப்பட்டதால் 13 நாட்களுக்கு பின், ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 5 ஆயிரம் பேர் நேற்று 1,200 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். சூறைக்காற்று, கடல் சீற்றம், ஓகி புயலால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 12நாட்களாக மீனவளத்துறை தடை விதித்திருந்தது. ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரையில் 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டன.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது காற்றின் வேகம், கடல் சீற்றம் குறைந்ததை தொடர்ந்து மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து 13 நாட்களுக்கு பிறகு நேற்றுகாலை ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் 5 ஆயிரம் பேர், 1,200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இலங்கை கடற்படை தொந்தரவு, இயற்கை இடர்பாடு இல்லாமல் இருந்தால் அதிகளவு மீன் கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,634

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.