Show all

புகைப்படக்கலை மூலம் புனைவு போலி செய்தியால் சிக்கிய தமிழக பாஜக! ஸ்டாலின் திருப்பூரில் துறைமுகம் அமைக்கப் போவதாகச் சொன்னாராம்

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: துபாய் தெருக்களை குஜராத் தெருக்களாக புகைப்படக்கலை மூலம் புனைவு செய்ததில் தொடங்கி, ராணுவ பெண் அதிகாரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளாக சித்தரித்தது வரை, அன்றாடம் புதிய புதிய வடிவங்களில் புகைப்படக்கலை மூலம் புனைவுகள் உலா வருகின்றன. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவது பாஜகவினர்தான் என்கிற குற்றச்சாட்டு நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதனை பாஜக தலைமை மறுத்தும் வந்தது. இனி அது முடியாது ஏனென்றால் நான்கரை ஆண்டுகளில் மாட்டிக் கொண்ட நயவஞ்சகன் புளுகு வெளிவந்து விட்டது. (கெட்டிக்காரன் புளுகு வெளிவர எட்டு நாட்கள் போல நயவஞ்சகன் புளுகு வெளிவர நான்கரை ஆண்டுகள் போல)

ஸ்டாலின் பேசாத ஒன்றை பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஒரு புகைப்படக்கலை மூலம் புனைவுப் பொய் செய்தியை, தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டு, கண்டனம் எழுந்தவுடன் பிறகு நீக்கிவிட்டு தமிழ்நாடு பாஜக அசிங்கப்பட்டு நிற்கிறது. கடந்த புதன் கிழமை கருணாநிதி சிலைதிறப்பு விழாவுக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 'தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூரில் துறைமுகம் அமைக்கப்படும்!' என்று கூறியதாக, பொய்யான செய்தி ஒன்று செய்தி ஊடகத்தில் 'அதிரடிச் செய்தி' வடிவில் புகைப்படக்கலை மூலம் புனைவாகப் பரவி வருகிறது. 

இதன் உண்மைத் தன்மையை அறியாமலேயே, அ.தி.மு.க., பாஜக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்களோடு முடிந்துபோயிருந்தால் சரி, தமிழ்நாடு பாஜகவும் தனது அதிகாரப்பூர்வ கீச்சுப் பக்கத்தில் இந்த போலியான புகைப்படக்கலை மூலம் புனைவு செய்தியை நேற்று இரவு 8:14 மணிக்கு பதிவிட்டது. பதிவில், 'திருப்பூரில் துறைமுகமா!! ஒன்பது கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் தான் இந்த அளவுக்கு யோசிக்க முடியும்' என்று நக்கலாக கிண்டல் வேறு செய்திருந்தனர். இது போலி செய்தி என்று கண்டனக் குரல்கள் எழும்ப, பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே செய்தி நீக்கப்பட்டது.

கொஞ்சம் கூட அடிப்படை அற்ற செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பதிவிடும் எண்ணம் கூட இல்லாமல், அதிகாரப்பூர்வ பக்கத்தில் புகைப்படக்கலை மூலம் புனைவு செய்தியை பாஜக பதிவிட்டுள்ளது, சமூக வலைதளவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அவ்வப்போது இதுபோன்ற தவறான  புகைப்படக்கலை மூலம் புனைவுகளை கணக்காய்வாளர் குருமூர்த்தி தனது கீச்சுப் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு, பிறகு நீக்கிவிடுவார். தான் பதிவிடும் செய்தி விவகாரம் ஆகும் பட்சத்தில், தனது நிருவாகி தான் செய்தியை பதிவிட்டதாக ஹெச்.ராஜா தாவல் வேலை செய்வார். திருப்பூர் துறைமுகம் போலிச் செய்திக்கு தமிழ்நாடு பாஜக தலைமை என்ன காரணம் கூறப் போகிறார்களோ தெரியவில்லை. 

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,052.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.