Show all

129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது! நுழைவு அனுமதி மோசடி செய்து அமெரிக்காவில் தங்க முயன்றமைக்காக

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் நுழைவு அனுமதி மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அதனை தடுப்பதற்கு போலிப் பல்கலைக்கழகம் ஒன்றை காவல்துறையினர் தொடங்கினர். இதில் பலரும் பதிவு செய்து நுழைவு அனுமதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பல்கலைப்பழகத்தில் நடத்தப்படும் பாடங்கள் சட்டவிரோதமானவை என்று தெரிந்தும் அதில் பல மாணவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதை தொடர்ந்து போலிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 130 பேரில் 129 பேர் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதனிடயே, கைது செய்யப்பட்ட இந்திய மாணவர்களை மீட்க நடுவண் வெளியுறவுத்துறை அமைச்சகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்காவில் 24 மணி நேரமும் செயல்படும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கைதான மாணவர்களின் பெற்றோர்கள் தொடர்பு கொள்ள தனிப் பிரிவையும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் cons3.washington@mea.gov.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும் பெற்றோர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,051.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.