Show all

வரலாறு காணாத அசிங்கத்தை தமிழக அரசு நிகழ்த்தியுள்ளது! திருவாரூரில் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில் திருவாரூரில் போராட்டம் நடத்திய 3 மாணவர்கள் உள்பட 26 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொதுவாக வாதம் வம்பு வழக்குகள் இன்றி வாழ்வதையே சாதாரண தமிழ்மக்கள் விரும்புவார்கள். காவல் நிலையத்துப் பக்கம் வாழ்க்கையில், மழைக்குக் கூட ஒதுங்கியது இல்லை என்பதை பெருமையாகக் கருதும் எளியமக்கள் ஏராளமானோர் உண்டு. வழக்கறிஞர்களுக்கும், காவலர்களுக்கும் பெண்ணும், கடனும் தரவே மாட்டார்கள். சிறைக்கு சென்று வந்தவர்களை தமிழ்ச் சமூகம் அவ்வளவாக மதிப்பது கிடையாது. இந்த அளவிற்கு வாதம் வம்பு வழக்குகளிலிருந்து தமிழ் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக விலகியே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 

மோடி அரசு தமிழ் மக்களுக்கெதிரான, மீத்தேன், கெயில் எரிவாயு, ஸடெர்லைட், நியுட்;;;;ரினோ, காவிரி மறுப்பு, மீனவர்கள் பாதிப்புக்கு சிங்கள காடையர்களுக்கு எதிராக எந்த முயற்சியும் முன்னெடுக்காமை, இப்படி வஞ்சகங்களை அரங்கேற்றி தமிழ் மக்களைத் தெருவில் வந்து போராட விட்டிருக்கிறது. இப்படி நடுவண் அரசு.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே!

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!

ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கிக் (5)

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! 

என்று பாடினார்கள் நம் பழந்தமிழச்சி பொன்முடியார். 

நல்ல நடையை உருவாக்கித் தருவது அரசின் கடமையாம். இன்றைக்கு- எடப்பாடி-பன்னீர் அரசு மோடியின் பினாமி அரசாக மாணவர்களின் மீது வழக்குப் போட்டு அவர்களின் வாழ்க்கையைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழினத்திற்கே இழைக்கிற மிகப் பெரும் துரோகமாகும்.

எடப்பாடி-பன்னீர் அரசு, உடனடியாக மாணவர்கள் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,750.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.