Show all

இரண்டு வருடங்களுக்குப் பிறகு களமிறங்கிய தனது முதல் போட்டியில் வெற்றிபெற்றது CSK

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் போட்டிகள் மும்பை வான்கடே மைதானத்தில்  இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.   

இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க  வீரர்களான கேப்டன்  ரோகித் சா்மா மற்றும் எவின் லீவிஸ் களமிறங்கினர். எவின் லீவிஸ் ரன் ஏதும் எடுக்காமல் தீபக் சாகர் பந்தில் ஆட்டமிழந்தார். 11வது ஐபிஎல் போட்டியின் முதல் விக்கேட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சாளா் தீபக் சாகர்  எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு ரோஹித் ஷர்மாவும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்து வந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 40 மற்றும் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. ஹர்திக் பான்ட்யா 22  ரன்களுடனும் க்ருனால் பான்ட்யா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் வாட்சன் இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சாகர் மற்றும் இம்ரான் தாஹிர் தல ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

அதன்பிறகு 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் வாட்சன் மற்றும் அம்பாதி ராய்டு களமிறங்கினர். வாட்சன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். சிறப்பாக விளையாடிய வந்த அம்பாதி ராய்டுவும் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோனி  5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எப்படியும் சென்னை தோற்று விடும் என்ற நிலையில் களமிறங்கிய பிராவோ மற்றும் ஹர்பஜன் சிங் சிறிது நேரம் சிறப்பாக விளையாடி சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர். ஆனால் ஹர்பஜன் சிங் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து சென்னை ரசிகர்களை மீண்டும் சோகமாக்கினார். எனினும் பிராவோ ஒற்றை ஆளாக நின்று போராடி 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார், இதில் 3 போர்களும் 7 சிக்ஸ்களும் அடங்கும். பிராவோ ஆட்டமிழந்தவுடன் மீண்டு போட்டியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. கடைசியில் ஆறு பந்துகளில் ஏழு ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்ததது. கடைசி ஓவரை கேதர் ஜாதவ் எதிர் கொண்டார். இறுதியில் ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. 

மும்பை அணி சார்பில் மயன்க் மற்றும் ஹர்திக் பான்ட்யா தலா 3 விக்கெட்டுகளையும், ரஹ்மான், பும்ரா மற்றும் மிட்சேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இப்போட்டி கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

2018 IPL Team Position
TEAM M W L NRR Points
CSK 1 1 0 +0.271 2
DD 0 0 0 0 0
KXIP 0 0 0 0 0
KKR 0 0 0 0 0
RR 0 0 0 0 0
RCB 0 0 0 0 0
SRH 0 0 0 0 0
MI 1 0 0 -0.271 0

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.