Show all

தமிழர் விளக்கேற்றுத் திருவிழா கொண்டாட்டம்

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகினர், தொல் கதைகளுக்கும், மதத் தலைவர்களுக்கும் ஹோலிதினங்களும், பண்டிகைகளும் கொண்டாடிய போது தமிழன்-

சமுதாயம் விழுந்து விடாமல் இருப்பதற்கு, விளை பொருட்கள் விற்பனையாகியாக வேண்டும். அதன் பொருட்டு, விளை பொருட்களை விளைத்துத் தந்த இயற்கைக்கும், விளைபொருளை விற்பனை செய்யும் நடவடிக்கை வணிகத்திற்கும்-

சமுதாயம் விழுந்து விடாமல் இருக்க என்ற பொருளில் ‘விழா என்ற தலைப்பில் விழா கொண்டாடியவன் தமிழன்.

இளவேனில் காலத்து அறுவடைத் திருவிழா பொங்கல்.

கார் காலத்து மழைத் திருவிழா ஆடிப் பெருக்குத் திருவிழா.

அடுத்து, கூதிர் காலத்து விளக்கேற்றுத் திருவிழா

இது பழங்காலத்தில் பத்து நாட்கள் கொண்டாடப் பட்டது. தற்போது மூன்று நாட்கள் மட்டும் கொண்டாடப் பட்டு வருகிறது.

அசுவணி நாள்மீனில் தொடங்கி கார்த்திகை நாள்மீனில் முடிகிறது தமிழர் கூதிர் காலத்து விளக்கேற்றுத் திருவிழா.

மண்விளக்கு, மலர்வகைகள், விளக்கெண்ணெய், நெய் கோலமிட அரிசிமாவு, போன்ற தமிழர் விளைபொருட்கள் எல்லாம் விற்பனையாகட்டும்.

இன்று அதிகாலை 4-12மணிக்கு அசுவணி நாள் மீன் தொடங்கியது. கார்த்திகை நாள் மீன் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 9-21மணிக்கு முடிகிறது.

உலகத் தமிழர் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,623

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.