Show all

எந்த மாநிலத்தில் இடம் ஒதுக்கப்பட்டதோ அங்கு தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்: தமிழகத்திற்கு அடுத்த அடி

தமிகத்தில் உள்ள நீட் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் தேர்வு எழுதுவதால் சில மாணவர்களுக்கு வெளிமாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக மாணவர்கள் அனைவரும் தமிழகத்திலேயே தேர்வு எழுத தமிழகத்தில் கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎஸ்சி-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இதனை எதிர்த்து சிபிஎஸ்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அதில், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகளை செய்ய கால அவகாசம் இல்லை என்று கூறியிருந்தது. இதை ஏற்றுக்கொண்டு உச்ச நீதி மன்றம் இந்த வருடம் தமிழக மாணவர்கள் அண்டை மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட மையத்துக்கு சென்று தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிட்டது. அடுத்த ஆண்டு இவ்வாறு சிரமம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இது வேண்டுமென்றே சிபிஎஸ்சி செய்வது போல் உள்ளது. ஏனென்றால் தமிழகத்தில் மட்டும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் சுமார் 300 மாணவர்களுக்கு மட்டுமே வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தான் கூடுதலாக மையம் ஏற்படுத்த முடியவில்லை என்பது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை. ஏற்கனவே இருக்கும் மையங்களில் இருக்கை எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே போதும். யாரை சமாதான படுத்த இவ்வாறு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. தமிழக ஆட்சியாளர்கள் குறைந்தபட்சம் தமிழக மாணவர்கள் சென்று வருவதற்கென  பிரத்தியேகமான வசதியையாவது செய்தால் பரவாயில்லை. ஏனென்றால் எப்படியும் தமிழக அரசு மத்திய அரசையோ மத்திய அரசு சார்ந்த நிர்வாகங்களையோ எதிர்க்கப்போவதில்லை. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.