Show all

காவிரி வழக்கு: மிக மிக கேவலமான காரணம் கூறி கால அவகாசம் கேட்ட மத்திய அரசு

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக வரைவு செயல் திட்டம் ஒன்றை பதிகை செய்திட நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் கொடுத்த கால அவகாசம் இன்று முடிவடையும் நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யாமல், காவிரி வரைவு திட்டம் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் கர்நாடக தேர்தல் பரப்புரையில் இருப்பதால் ஒப்புதல் பெற இயலவில்லை. எனவே, அதற்கான ஒப்புதலை பெற்று இறுதி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க இரண்டு வார காலம் அவகாசம் கேட்டுள்ளது. எழுத்துபூர்வமாக அல்லாமல் வாய்மொழியாக அவகாசம் கேட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கதை விடும் மத்திய அரசு இந்த முறை கூறியுள்ள காரணம் மிக மிக கேவலமான ரகம். மக்களுக்காக வேலை செய்வதை விட தேர்தல் பரப்புரை தான் முக்கியம் என்கிற மாதிரி இருக்கிறது காரணம்.

அதை தொடர்ந்து தமிழக அரசு, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது, மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது எனவும் குற்றம் சாட்டியது.

இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு இம்மாதம் 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசும் தேர்தலை காரணம் காட்டி இப்போது திறந்து விட முடியாது என கூறியது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்கமுடியாது. தண்ணீர் கண்டிப்பாக திறக்க வேண்டும், உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என உச்ச நீதி மன்ற எச்சரித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.