Show all

இனிதே அமைந்த, ஆளுநரின் தமிழ் மெய்யியல் பயணம்!

ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநரின் பயணம் குறித்த வகையில் குறித்தவாறு சிறப்பாக நடைபெற தமிழ்நாடு அரசு மூன்றடுக்கு பாதுகாப்பு முன்னெடுத்திருந்ததையும். தமிழ்உணர்வாளர்கள் தங்கள் ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் பண்பாடு காத்திருந்ததையும், உலக ஊடகங்கள் வியந்து பாராட்டுகின்றன.

08,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தருமபுரம் ஆதீனத்தின் இருபத்தி ஏழாவது அடிகளாரின் அழைப்பை ஏற்று பேரறிவுத்தேர் பயணத்தைத் தொடங்கி வைப்பதற்கு ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தெரிவித்தார். 

மேலும், மடத்தின் வளாகத்தில் கட்டப்பட உள்ள புதிய அரங்கிற்கான அடிக்கல் நாட்டவும் ஒப்புதல் தெரிவித்திருந்தார். ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநரின் பயணம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசின் மூத்த அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

நேற்று காலை 9.50 மணியளவில் தருமபுரம் மடத்தை நோக்கி ஆளுநரின் கார் சென்று கொண்டிருந்தபோது மன்னம்பந்தல் பகுதியில் ஆளுநருக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்களைப் பார்க்க முடிந்தது. 

தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு பங்கம் விளைக்கும் வகையில் ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதை தமிழ்நாடு வருத்தத்துடன் கவனித்து வருகிற நிலையில், அரசியல் சாராத தமிழ் உணர்வாளர்கள் ஆளுநருக்கு எதிரான இந்த முழக்கப் போராட்டத்தை முன்அறிவித்திருந்தனர்.

மக்களாட்சி அடிப்படையில், கறுப்புக் கொடியைக் காட்டி ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூடினோம். அங்கு காவல்துறையும் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். எங்களுக்கு முன்னால் கயிறு ஒன்றையும் கட்டியிருந்தனர். இதை மீறி நீங்கள் வெளியில் வரக்கூடாது எனவும் வேண்டுகோள் வைத்தனர். அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டி, எங்கள் உணர்வை வெளிப்படுத்துவது எங்கள் நோக்கம் என்று போராட்டம் அறிவித்து  ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய தமிழ்உணர்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகள் என்று பார்த்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 30 பேர் வந்திருந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் வந்திருந்தனர். என்று தெரியவருகிறது.

ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநரின் பயணம் குறித்த வகையில் குறித்தவாறு சிறப்பாக நடைபெற தமிழ்நாடு அரசு மூன்றடுக்கு பாதுகாப்பு முன்னெடுத்திருந்ததையும். தமிழ்உணர்வாளர்கள்- ஒன்றிய அரசு நியமிக்கும் தமிழ்நாட்டிற்கான ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் பண்பாடு காத்திருந்ததையும், உலக ஊடகங்கள் வியந்து பாராட்டுகின்றன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,225. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.