Show all

கத்தி திரைப்பட பாணியில் சென்னையை ஸ்தம்பிக்க வைத்த விவசாயிகள் ஆதரவு போராட்டம்

விஜய் நடித்த கத்தி திரைப்படத்தில், விவசாயிகளின் கஷ்டத்தை சென்னைவாசிகள் தெரிந்துகொள்ள, சென்னைக்கு வரும் தண்ணீர் குழாய்களை அடைக்கும் விதமாக போராட்டம் நடைபெறும்.

     இதனால் சென்னையில் குடிநீருக்கும், குளிக்கவும் கஷ்டம் ஏற்படும். மொத்த ஊடகங்களும், இப்போராட்டத்தை ஒளிபரப்பு செய்யும். இதன்பிறகே கிராமங்களில் நடந்து வரும் அக்கிரமங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து, மக்களின் நெருக்கடி காரணமாக விடிவுகாலம் பிறக்கும்.

     இதேபோல சென்னையில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து தலைநகர மக்களின் கவனத்தை ஈர்க்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். எனவேதான் அவர்கள் கிண்டியை தேர்ந்தெடுத்ததுள்ளனர். விமான நிலையத்திலிருந்து நகருக்குள் வரும் பெரும்புள்ளிகள் இந்த சாலையை பயன்படுத்துவார்கள். அவர்களைப் போராட்டத்தின் சூடு எட்ட வேண்டும் என்பது போராட்டக்காரர்கள் நோக்கம்.

     டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான இயக்குநர் கவுதமன் தலைமையில் இன்று சென்னையில் திடீரென போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதனால், சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. சென்னை கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கிப்போயின. கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை, அதேபோல சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியவில்லை. இதனால் காலையில் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்படைந்தனர். கிண்டி முக்கிய பகுதி என்பதால் சென்னை நகரம் முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

     பிச்சைக்காரன் படத்தை நகலெடுத்;;து நட்ட நடு ராத்திரியிலிருந்து மாதக்கணக்கா மக்களை நடுத்தெருவில் செல்லாது என அறிவிக்கப் பட்ட ரூபாய் தாள்களை எடுத்துக்கிட்டு அலையவிட்ட மோடி- மஸ்தான்டா!

ண்ணா

     கத்தி படபாணியில் போராட்டம் செய்யற நம்மஇளைஞர்கள்- தமிழன்டா!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.