Show all

கோடை மழை கொட்டப்போகுதாம். வானிலையின் குளுகுளு அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என்றும் வெப்பச்சலனத்தினால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

     சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:

     தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும். அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு வழக்கத்தை விட வெப்பம் சற்று அதிகரித்தே காணப்படும்.

     கடந்த 24 மணி நேத்தில் அதிகமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பதிவானது.

     வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சித்திரை இளவேனிற்காலம் தொடங்குவதால்; கோடை மழையை எதிர்பார்க்கலாம். தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது இது நகரும் பட்சத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.