Show all

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்துக்கு திடீர் பூட்டு போட்டதால் கடும் வாகன நெரிசல்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை கத்திபாராவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

     டெல்லியில் தமிழக விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 31வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     அவர்களை இதுவரை நடுவண் அரசு கண்டுகொள்ளாத நிலையில், சென்னை கத்திப்பாரா பாலத்துக்கு பூட்டுப்போட்டு மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திடீர் போராட்டத்தால் கத்திப்பாரா பகுதியில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

     சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. கிண்டி வழியாக சென்னைக்குள் எந்த வாகனமும் போக முடியவில்லை. கிண்டி, விமானநிலையம், வடபழனி சாலைகள் அனைத்தும் முடங்கியுள்னது.

     சென்னையிலிருந்து எந்த வாகனமும் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் செல்வோர் அலுவலகம் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

     அதிகவை உடைப்பது! இடைத் தேர்தலை நிறுத்துவது போன்ற முயற்சிகளில் ஆர்வத்துடன் செயல் பட்டுக் கொண்டிருக்கும் பாஜக-

வேளாண் பெருமக்கள் போராட்டம், மீனவர்கள் பிரச்சனை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, கட்சத்தீவு மீட்பு போன்றவற்றில் எல்லாம் தீர்வுக்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளததால் தமிழக மக்கள் குமுறிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் விளைவே இந்தப் போராட்டம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.