Show all

ஸ்டாலின் வரிந்துகட்டுகிறார்! இனியும் விட்டுவைக்கக் கூடாது! பாஜக பினாமி, தமிழர்விரோத, சிறுபான்மை அரசை

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு, ஐநா அவை கண்டனம் தெரிவித்துள்ளதால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில், கூண்டோடு பதவி விலகுவது குறித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, திமுக, கூட்டணி கட்சிகள் சார்பில், முழு அடைப்பு போராட்டமும், சாலை மறியலும் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து, உலக நாடுகளில் வாழும் தமிழர்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஐநாஅவையும், கண்டனம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், நாளை தொடங்குகிறது; 23 நாட்கள் கூட்டம் நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும், துறை வாரியான விவாதம் நடக்க இருக்கிறது.

அதில், துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் கறுப்புச் சட்டை அணிந்து வந்து, அன்றாடம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தலாமா அல்லது கூண்டோடு பதவி விலகலாமா என, ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

இதுபற்றி முடிவெடுப்பதற்காக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அதற்கு முன்னதாக, 

தமிழக மக்களின் நலன் கருதி, அதிமுக, அரசை வீழ்த்த, சட்ட ரீதியாகவும், மக்களாட்சி தத்துவ அடிப்படையிலும்  போராட, ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என, சட்;டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்கள், ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளன.

ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், தமிழக காவல்துறைத் தலைவர் டி.கே ராஜேந்திரன், உளவுத்துறை, தலைமை ஆய்வாளர் சத்தியமூர்த்தி, மாவட்டக் கண்காணிப்பாளர் மகேந்திரன், துணை தலைமை ஆய்வாளர் கபில் சரத்குமார், மதுரை மண்டல, தலைமை ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் மீதும், ஒப்புதல் அளித்த முதல்வர் பழனிசாமி மீதும், கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும்.

உடனடியாக, முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றால், திமுக, சார்பில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். 

ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலை மாசு படுத்தியதற்கு அபராதமாக, உச்ச அறங்கூற்று மன்றம் விதித்த, 100 கோடி ரூபாய் மற்றும் அதன் மீதான வட்டிப் பணம், தற்போது, தூத்துக்குடி ஆட்சியரின்  கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அந்த நிதியில் இருந்து, பலியாகி உள்ள, 13 பேர் குடும்பத்திற்கு, தலா, ஒரு கோடி ரூபாயும், ஆலையால் நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள குடும்பங் களுக்கு, தேவையான நிதியுதவியும் அளிக்க, ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,801. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.