Show all

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்! தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து நேற்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், படுகொலையை நிகழ்த்திய ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மண்ணையும் காற்றையும் மக்களையும் கார்ப்பரேட் தாமிரத்தூசு மாசுவிலிருந்து காத்திட வேண்டும் என்பன போன்ற முழக்கங்களும் இதில் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் சல்மா, அஜயன்பாலா., கவிஞர் யுகபாரதி, இயக்குனர்கள் எஸ்.பி. ஜனநாதன், ப.ரஞ்சித், பாலாஜி சக்தவேல், சசி, சீனுராமசாமி, கார்த்திக்சுப்புராஜ், ராம், பாண்டிராஜ், பிரம்மா, ராஜூ முருகன், தாமிரா, மீரா கதிரவன், மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கலையரசன், அசோக் செல்வன், சுந்தராஜன், வழக்கறிஞர் அருள்மொழி, பேரா.ஹாஜாகனி, செயற்பாட்டாளர் ஆளூர் ஷாநவாஸ், ஊடகவியலாளர்கள் அ.குமரேசன், ஆழி. செந்தில்நாதன், கவின்மலர், அருள் எழிலன், அதிஷா, டி.எஸ்.ஆர். சுபாஷ், அதிஷா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,800. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.