Show all

வாட்சன் அதிரடியால் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கிய இந்த தொடரின் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு  கரண் சர்மாவும், ஐதராபாத் அணியில் கலீல் மற்றும் சகாவிற்கு பதிலாக சந்தீப் மற்றும் கோஸ்வாமி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. 

இதன்படி ஐதராபாத் அணி சார்பில், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கோஸ்வாமி 5 ரன்னில் ரன் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஷிகர் தவானும் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 47 ரன்களும் யூசுப் பதான் 45 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுளை இழந்து 178 ரன்கள் குவித்தது. சென்னை அணி தரப்பில் தாகூர், நிகிடி, சர்மா, பிராவோ மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி சார்பில் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டு பிளிஸ்சிஸ் 10 ஆட்டமிழக்க ஷேன் வாட்சனுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இவ்விருவரும் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ரெய்னா 32 ரன்னில் ஆட்டமிழந்தார். சென்னை அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுளை இழந்து 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. சென்னை அணியில் ஷேன் வாட்சன் 117(57)ரன்களும்,  அம்பாதி ராயுடு16(19) ரன்களும் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் அணி சார்பில் சர்மா மற்றும் பிராத்வெய்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி ரூ.20 கோடி பரிசுத்தொகையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.