Show all

ஏழு அகவைச் சிறுமி, வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பதில் சாதனை

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பதில் சாதனை படைத்து ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சாதனைப் பட்டியலில் இடம்பெற்றவர் நான்சி.

சென்னையைச் சேர்ந்த இந்த ஏழு அகவைச் சிறுமி, தற்போது உலக அரங்கில் 2000 சர்வதேச சாதனையாளர்கள் மத்தியில் கவுரவிக்கப்பட உள்ளார்.

சென்னை, மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்- லிசி பிரான்சிஸ் தம்பதியின் மகள் நான்சி. சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டு, படிப்பு என ஆர்வம் இருந்தாலும், வேதியியல் மூலக்கூறுகளை ஒப்புவிப்பதை பொழுதுபோக்காகவே மாற்றிக்கொண்டார்.

அண்மையில், வேதியியலில் உள்ள 118 மூலக்கூறுகளையும் வரிசை மாறாமல் 64 விநாடிகளில் ஒப்புவித்து ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சாதனைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

‘கண்டுபிடிப்புகளும் விஞ்ஞானிகளும்என்ற தலைப்பின்கீழ் ஒப்புவித்து கின்னஸ் சாதனை செய்ய இருக்கிறார். இதற்கான அனுமதிக்காக நான்சி காத்திருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.