Show all

தாயார் சோனியா நலம் குறித்து கீச்சுவில் ராகுல் பதிவு

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சிம்லா சென்று இருந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு ஸ்ரீகங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், தனது தாயார் உடல்நலம் குறித்து நேற்று இரவு கீச்சுவில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘சிம்லாவில் இருந்த சோனியா காந்திக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. எனவே, அவரை டெல்லி அழைத்துவந்தோம். கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. சோனியா காந்தி நன்றாக உள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.