Show all

ஆடேயப்பா! 100 மதிப்பெண் எடுத்ததால் விமானப் பயணம்: அரசுப்பள்ளி ஆசிரியையின் பரிசு

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை, அம்பத்தூரில் உள்ள காமராசர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார் செல்வகுமாரி.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குச் சமூக அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். ஒருநாள் பாடத்திட்டத்தில் உலக வரைபடத்தில் உள்ள இடங்களை குறிப்பது குறித்து பாடம் எடுத்தபோதுதான், அவர் மனதில் இப்படியொரு எண்ணம் உதயமாகியிருக்கிறது.

பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்தால் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வேன்என அறிவித்தார் ஆசிரியை செல்வகுமாரி.

அதன்படி தேர்வில் 100 மதிப்பெண் எடுத்தவர்களை தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆசிரியை செல்வகுமாரியின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

சிறந்த மதிப்பெண் எடுத்து நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கமளிக்கும் விதமாகப் பரிசுகள் அளிப்பது வழக்கம். இந்த வரிசையில் அம்பத்தூர் அரசுப் பள்ளி ஆசிரியையின் பரிசு கொஞ்சம் வித்தியாசமானதுதான். தனது வகுப்பில் யார் 100 மதிப்பெண் வாங்கினாலும், அவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.