Show all

கடுமையான விதிமுறைகளுடன் மாடுபிடி வீரர்கள் தேர்வு! மதுரை பாலமேட்டில்; சல்லிக்கட்டை முன்னிட்டு, காவல்துறை உடல் திறன் தேர்வை மிஞ்ச

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுநாளும், அலங்காநல்லூரில் வியாழக்கிழமையன்றும் சல்லிக்கட்டு நடக்கவிருக்கிறது. அலங்காநல்லூரில் முந்தாநாள், பாலமேட்டில் நேற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு மற்றும் காளைகளுக்கான தகுதி சான்று வழங்கும் முகாம் நடந்தது. சுகாதார துணை இயக்குனர் அர்ஜுன்குமார் மேற்பார்வையில் 40 பேர் குழு இதில் ஈடுபட்டனர். 39 பேர் தகுதியிழப்பு குறித்து டாக்டர் வளர்மதி கூறியதாவது: 18 - 40 அகவைக்கு உட்பட்டோர், 160 செ.மீ., உயரம், 60 கிலோ எடை கொண்ட ஆஸ்துமா, மூச்சுத் திணறல், வலிப்பு, இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லாதோர் தேர்வு செய்யப்பட்டனர். 884 பேர் பங்கேற்றனர். 39 பேர் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். நிழற்படம் ஒட்டிய விண்ணப்பம் பெறப்பட்டு உடனுக்குடன் கணினியில் பதிவேற்றப்பட்டது. தகுதியானவர் மட்டுமே சல்லிக்கட்டில் பங்கேற்க முடியும், என்றார்.

மருத்துவர் ஹமீதா கூறியதாவது: அதிகாலை 4:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு நடந்தது. தகுதிச் சான்றுடன் வரும் வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். தகுதி சான்றின் உண்மைத்தன்மையை ஒப்பிட்டு அடையாள அட்டை வழங்கப்படும், என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.