Show all

உலகத் தமிழர்களுக்கு போகித் திருநாள் வாழ்த்துக்கள்!

30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர்களின் இயற்கை போற்றல் விழாவான பொங்கல் விழா கொண்டாட்டத்தின் முதல் நாள் போகித்திருநாள் ஆகும். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகித்திருநாளாக கொண்டாடப் படுகிறது. இன்று போகித்திருநாள். இனிய போகித்திருநாள் வாழ்த்துக்களை மௌவல் சார்பாக உலகத் தமிழர்களுக்கு தெரிவித்து மகிழ்கிறோம்.

இன்று வீட்டை தூய்மைப் படுத்தி, திருக்குறள், இலக்கியப் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் ஏதாவது இருந்தால் அவற்றையெல்லாம் துடைத்து பத்திரப் படுத்தி, வீடுகளுக்கு வெள்ளை அடித்து மாலையில் காப்பு கட்டி இன்;றைய போகித்திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வோம்.

நாளை தித்திக்கும் கரும்பு, மங்களம் பொங்கும் மஞ்சள்குலைகள் காய்கறிகள் படைத்து, புத்தம் புது பானையில், புத்தரிசியிட்டு, பொங்கலிட்டு வழிபடுவது மரபு ஆகும். பொங்கலை முன்னிட்டு தமிழகமெங்கும், மஞ்சள்குலை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மஞ்சள்குலைகள் ஒரு மஞ்சள் குலை தரம் வாரியாக ரூ.20ல் இருந்து ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விளைச்சலுக்கு ஏற்ப நல்ல விலையும் கிடைப்பதால் மஞ்சள்குலை பயிர் செய்துள்ள உழவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதுபோல பொங்கலை முன்னிட்டு பனங்கிழங்குகள் பிடுங்கும் பணிகளில் உழவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 25 பனங்கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல கரும்புகள் விற்பனையும் களை கட்டியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,032.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.