Show all

எஸ்.வி.சேகர் மீது திருநெல்வேலி அறங்கூற்றுமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண் இதழியலாளர்கள் குறித்து நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில் மிகவும் தரக் குறைவாக வெளியிட்ட பகிர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தான் வெளியிட்ட விமர்சனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பவே நீண்ட நேரத்திற்குப் பிறகு தனது முகநூல் பக்கத்திலிருந்து அதை நீக்கிவிட்டார். இருப்பினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இதழியலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் திருநெல்வேலி 1-வது குற்றவியல் அறங்டுகூற்றுத்துறை நடுவர் மன்றத்தில் எஸ்.வி.சேகர் மீது, திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் கோபால்சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட அறங்கூற்றுவர் பிஸ்மிதா, விசாரணையை வரும் புதன் கிழமைக்கு தள்ளிவைத்துள்ளார்.

தான் தோன்றித்தனமாக, சமூக பொறுப்புணர்வு கொஞ்சமும் இல்லாமல், குடித்துவிட்டு நிலை தடுமாறுகிறவர் போலவோ, மனநிலை பாதிக்க பட்டவர் போலவோ அண்மைக் காலமாக எச்.இராஜாவும், எஸ்.வி.சேகரும் தொடர்ந்து பலரின் மனதை புண்படுத்தி வருகிறார்கள். மனநிலை பாதித்துள்ள, இவர்கள் மீது இயல்பான மனிதர்கள் போல இவர்களை பாவித்து, வழக்கு தொடருவதை விட மனநலக் காப்பகத்தில் வைத்து ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு பராமரிக்கலாமே.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.