Show all

ராஜஸ்தானை எளிதாக வீழ்த்தியது சென்னை: வாட்சன் அதிரடி சதம்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 11-வது சீசனின் 17-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புனேவில் நேற்று இரவு பலப்பரீட்சை நடத்தின. காயத்தில் இருந்து குணமடைந்த சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு திரும்பினார். மேலும் சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மாவுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு முரளிவிஜய் மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் நீக்கப்பட்டனர். டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் மற்றும் ராயுடு தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கினர். 

வாட்சன் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். எனினும் மறுமுனையில் அம்பத்தி ராயுடு 12 ரன்களில் (8 பந்து, 2 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். இதையடுத்து கூட்டணி சேர்ந்த வாட்சன், ரெய்னா இருவரும் அதிரடியாக விளையாடினர். ரெய்னா 46 ரன் (29 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த கேப்டன் டோனி (5 ரன்), சாம் பில்லிங்ஸ் (3 ரன்) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடிய வாட்சன் 106 ரன் (57 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து ஆட்டமிழந்தார். இறுதியாக சென்னை 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. பிராவோ 24 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் கோபால் 4 ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் லாப்ளின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் ராஜஸ்தான் அணி 18.3 ஓவரிலேயே 140 ரன்னுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் சிறப்பாக விளையாடி 45 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார். சென்னை அணி சார்பில் சாஹர், தாகூர், பிராவோ, கரண் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வாட்சன், தாஹிர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் சென்னை அணி 64 ரன் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.  வாட்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

2018 IPL Team Position
Rank TEAM M W L NRR Points
1 CSK 4 3 1 +0.878 6
2 KKR 5 3 2 +0.825 6
3 SRH 4 3 1 +0.414 6
4 KXIP 4 3 1 +0.227 6
5 RR 5 2 3 -1.043 4
6 MI 4 1 3 +0.445 2
7 RCB 4 1 3 -0.861 2
8 DD 4 1 3 -1.399 2

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.