Show all

பிரிட்டன் அரசின் நாகரீக மாண்பும், மோடி அரசின் கார்ப்பரேட் வீம்பும்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், இந்தியாவில், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு நியாயம் கேட்டும் லண்டன் வாழ் தமிழர்களும், இலண்டன் வாழ் இந்திய மக்களும், மோடியே திரும்பி போ என சென்னையில் நடத்தியது போல் இலண்டனில் போராட்டத்தை நடத்தினர். 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டனப் பதாகைகள் ஏந்தியிருந்தனர்.; இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொதுநலவாய அந்தந்த 53 நாடுகளின் கொடி ஏற்றப்பட்டிருந்தன. அதில் இந்தியக் கொடியை போராட்டக்காரர்கள் எடுத்து கிழித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொடி கிழிக்கப்பட்ட சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் கிழிக்கப்பட்ட கொடிக்கு பதிலாக வேறொரு புதிய கொடியையும் ஏற்றியது. 

இது இங்கிலாந்தின் நாகரீக மாண்பைக் காட்டுகிறது. சென்னையிலிருந்து இலண்டன் வரை துரத்தி துரத்தி காவிரி மேலாண்மை வாரியத்திற்கும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கும் நியாயம் கேட்டு போராடிய தமிழர்களுக்கும் இலண்டன் வாழ் இந்தியர்களுக்கும் எந்த பதிலும் சொல்லாமல், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வானில் பறந்து ஒடும் மோடிக்கு என்ன வகை மாண்பு இருக்க முடியும்! அவர் இந்தியாவிற்கு தலைமை அமைச்சரா? இல்லை கார்ப்பரேட்டுகளுக்கு சந்தை மேலாளரா என்று ஒட்டு மொத்த இந்திய மக்களே தமிழர்களோடு சேர்ந்து புலம்பத் தொடங்கி விட்டார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.