Show all

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் ஒன்றை வாங்கவுள்ளதாக இந்தியா அறிவிப்பு

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிவேக புல்லட் ரயில் ஒன்றை வாங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்த அதிவேக ரயில் மும்பை மற்றும் அகமதபாத் நகர்களை இணைக்கும் எனவும், இது இந்திய ரயில்வேத்துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் எனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.

எதிர்காலத்தில் இந்திய ரயில்வேயின் பயணத்தை இந்த நடவடிக்கை விரைவுபடுத்தும் எனவும் இந்தியப் பிரதமர் கூறுகிறார்.

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபேயின் இந்தியப் பயணத்தின்போதே இதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.

இரண்டு நாள் இந்தியப் பயணமாக வந்துள்ளார் ஜப்பானியப் பிரதமர்.

பாதுகாப்புத் தொழில்நுட்பத்திலும் இருநாடுகளும் இணைந்து செயல்படவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இருதரப்பும் அறிவித்துள்ளன.

இராணுவம் சாராத்துறைகளில் அணுசக்தியை பயன்படுத்துவது குறித்தும் இந்தியா-ஜப்பான் இடையே உடன்பாடு ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.