Show all

தமிழ்நாட்டில் உயருகிறது மின்கட்டணம்!

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. என்ற பிடிகையோடு தமிழ்நாடு அரசு தன் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது.

03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று 28 முறை ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. என்ற பிடிகையோடு தமிழ்நாடு அரசு தன் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்  மின்துறையில் கடன் உயர்ந்துள்ள காரணத்தாலும் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர ஒன்றிய அரசு வலியுறுத்தியதாலும் மின்கட்டணங்களை உயர்த்துவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

42 விழுக்காடு வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் 100 அலகு வீட்டு இலவச மின்சாரம் தேவையில்லை எனில், அந்த மானியத்தை வாடிக்கையாளர்கள் விட்டுக்கொடுக்கலாம். இருந்தாலும், 100 அலகு இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை. விசைத்தறிகளுக்கு 750 அலகு மின்சாரம் இலவசம் தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

200 அலகு வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் பெறப்படும். 
201- 300 அலகு பயன்படுத்துபவர்களுக்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் பெறப்படும்.
301 அலகு முதல் 400 அலகு வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 
500 அலகுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.297.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். என்று தெரியவருகிறது.

இதனால் பத்து விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடு வரை 58 விழுக்காடு பயனர்களுக்கு கட்டணம் உயரக்கூடும் என்று தெரியவருகிறது. 42 விழுக்காடு வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,314.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.