Show all

பாண்டே பேச்சில் பயின்று வரும் அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா? இரஜினி ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்.

இரஜினி அகவை 70க்கு வந்துவிட்டார் அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும். திமுக, அதிமுகவை சமாளிக்க நீங்கள்தான் இரஜினிக்கு உறுதி தர வேண்டும் என்று இதழியலாளர் அரங்கராஜ் பாண்டே இரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்தப் பேச்சில் பயின்று வரும் அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா? 

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரஜினி அகவை 70க்கு வந்துவிட்டார் அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும். திமுக, அதிமுகவை சமாளிக்க நீங்கள்தான் இரஜினிக்கு உறுதி தர வேண்டும் என்று இதழியலாளர் அரங்கராஜ் பாண்டே இரஜினி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு இரஜினி அரசியலுக்காகவே ஒரு தனி தொலைக்காட்சி கண்மடை (சேனல்) தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இதற்காக அவர் சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயர்களை பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அந்தச் செய்தி உண்மையானதுதான் என்று இரஜினியே அப்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வுக்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான், கண்மடை நிகழ்ச்சி ஒன்றின் பொறுப்பில் இருந்து அரங்கராஜ் பாண்டேவும் விலகி இருந்தார். அதனால், எப்படியும் இரஜினி தொலைக்காட்சி கண்மடை தொடங்கினால், பாண்டேதான் அதில் பொறுப்பு வகிப்பார் என்ற தகவல்களும் கசியத் தொடங்கின. ஆனால் வந்த வேகத்திலேயே அந்தத் தகவல் அப்படியே முடங்கிப் போயிற்று.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது- இரஜினியின் பிறந்த நாள் விழா, வேலூரில் கொண்டாடப்பட்டது. மாவட்ட இரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி ஏற்பாட்டில் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, இதழியலாளர் ரங்கராஜ் பாண்டே போன்றோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

இதில் பாண்டே பேசும்போது, “அரசியல் என்பது எளிமையானதல்ல. பலம் பொருந்திய திமுக, ஆட்சியில் உள்ள அதிமுக போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்கிற உறுதியை ரசிகர்களான நீங்கள்தான் அவருக்குத் தரவேண்டும். இரஜினிக்கு தற்போது அகவை 70. அவரால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திக்க முடியும்" என்றார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.