Show all

உருசியஅரசு விளையாட்டில் விளை(னை)யாடியதால்! சர்வதேச போட்டியில் பங்கேற்க உருசியாவிற்கு 4 ஆண்டுகள் தடை

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில் உருசியவீரர், வீராங்கனைகள் அரசின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும், அதனை அந்த நாட்டு ஊக்க மருந்து தடுப்பு முகமை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல் எழுந்தது. மெக்லரன் குழு அளித்த அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டின் மீது - சர்வதேச போட்டியில் பங்கேற்க உருசியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது.

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலகட்டத்தில் உருசியவீரர், வீராங்கனைகள் அரசின் ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாகவும், அதனை அந்த நாட்டு ஊக்க மருந்து தடுப்பு முகமை கண்டும் காணாமல் விட்டுவிட்டதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிக்கல் எழுந்தது. மெக்லரன் குழு அளித்த அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதனை அடுத்து உருசியவீரர்-வீராங்கனைகள் சர்வதேச போட்டியில் உருசியநாட்டு கொடியின் கீழ் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒலிம்பிக் போட்டியில் உருசிய வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் கொடியின் கீழ் பொதுவான வீரர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் இந்தத் தடையை நீக்க கடந்த ஆண்டில் எடுத்த முடிவு சர்ச்சையானது.

இந்த நிலையில் உருசியா மீதான ஊக்க மருந்து விவகாரம் குறித்து உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை விசாரணை நடத்தியது. உருசியா ஊக்க மருந்து தடுப்பு முகமையின் ஊக்க மருந்து சோதனை மையத்தில் உள்ள மாதிரிகளை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் மாதிரிகளில் உருசியா ஊக்க மருந்து சோதனை மையம் குளறுபடி செய்ததாக கூறப்பட்டது.

உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் மறுஆய்வுக் குழு இந்த ஊக்க மருந்து பிரச்சினை குறித்து விரிவாக ஆய்வு செய்தது. அந்த மறு ஆய்வு குழு சர்வதேச போட்டியில் பங்கேற்க உருசியாவுக்கு 4 ஆண்டுகள் தடைவிதிக்க பரிந்துரை செய்து இருந்தது. இந்த பரிந்துரையை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் செயற்குழு அப்படியே ஒருமனதாக ஏற்று கொண்டு இருக்கிறது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மற்றும் இன்னும் மூன்று ஆண்டுகளில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் உருசியா பங்கேற்க முடியாது. ஊக்க மருந்து சோதனையில் தேறும் உருசியவீரர், வீராங்கனைகள் பொதுவான வீரர்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடியின் கீழ் தான் பங்கேற்க முடியும். அத்துடன் உருசியஅரசு அதிகாரிகள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தடை காலத்தில் உருசியா எந்தவித சர்வதேச போட்டியும் நடத்த முடியாது. சர்வதேச போட்டிகளை நடத்த விண்ணப்பமும் செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தடையை எதிர்த்து உருசியா 21 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம். அப்படி முறையீடு செய்தால் அதனை விளையாட்டு தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று தெரியவருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.