Show all

அண்ட அழகியாகத் தேர்வு! தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டுன்சி

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ‘அண்ட (யுனிவர்ஸ்) அழகி போட்டி’ நடந்தது. அண்டத்தில் ஞாயிறு உள்ளிட்ட கோள்கள் மின்மினிகள் கூட அடக்கம். இந்த அழகிப்போட்டிக்கு அங்கிருந்தெல்லாம் யாரும் கலந்து கொள்ளவில்லை. உலக அழகிப் போட்டியை உயர்வு நவிற்சிக்காக அண்ட அழகிப் போட்டி என்று கெத்து காட்டுகின்றனர். இந்தப் போட்டியில்- தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி டுன்சி அகவை 26 அண்ட அழகி பட்டம் வென்றார்.

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ‘அண்ட (யுனிவர்ஸ்) அழகி போட்டி’ நடந்தது. அண்டத்தில் ஞாயிறு உள்ளிட்ட கோள்கள் மின்மினிகள் கூட அடக்கம். இந்த அழகிப்போட்டிக்கு அங்கிருந்தெல்லாம் யாரும் கலந்து கொள்ளவில்லை. உலக அழகிப் போட்டியை உயர்வு நவிற்சிக்காக அண்ட அழகிப் போட்டி என்று கெத்து காட்டுகின்றனர். மற்றக் கோள்களில் மனிதர்கள் இருந்து, அவர்களோடு சேர்ந்து அண்ட அறங்கூற்று மன்றம் அமைக்கும் வரை- யாரும் இந்தப் பெயரை வைத்து விட்டு மற்றக் கோள்களில் இருந்து யாரையும் அழைக்கவில்லை என்று வழக்கு தொடரும் வரை- உலக அழகிப் பேட்டியை அண்ட அழகிப்போட்டி என்றே கெத்து காட்டலாம்.

அண்ட அழகிப்போட்டியில்- உலக நாடுகளை சேர்ந்த 90 பெண்கள் போட்டியிட்டனர். இதில் இறுதிச்சுற்றுக்கு அழகி வர்டிகா சிங் உட்பட 20 பேர் தேர்வாகினர். இவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதிலளித்த தென் ஆப்பிரிக்க பெண் டுன்சி அண்ட அழகியாக அறிவிக்கப்பட்டார்.

அவரிடம் இன்றைய இளம்பெண்கள் முதன்மையாக கற்க வேண்டிய கருத்து என்ன என்று போட்டி நெறியாளர் புரவலன் ஸ்டீவ் ஹார்வி கேட்டார். அதற்கு, 'பெண்கள் எளிதில் அடைய இயலாத இடமாக தலைமைப்பண்பு இருக்கிறது. அதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வதே பெண்கள் கற்க வேண்டிய தலையாய கருத்து என பதிலளித்தார். சமுதாயத்தில் தமக்கான இடத்தை பெண்கள் தாங்களே எடுத்துக்கொள்ள வேண்டும், என்றார். இந்த பதிலைத் தொடர்ந்து, அவர் அண்ட அழகியாக அறிவிக்கப்பட்டார்.

2வது இடத்தை மெக்சிகோவின் சோபியா அராகனும், 3வது இடத்தை ப்ரூட்டோ ரிகோவை சேர்ந்த மேடிசனும் பெற்றனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,362.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.