Show all

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் சோதனை

முன்னாள் நடுவண்அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் அவரது நண்பர்களின் நிறுவனங்களில், அமலாக்க பிரிவினர் மற்றும் வருவாய் வரித்துறையின் புலனாய்வு பிரிவினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் இந்தச் சோதனை நடைபெற்றது.

சட்டவிரோதமாக வெளிநாட்டு பணவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, சமீபத்தில் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து இன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்தச் சோதனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இந்தச் சோதனையைத் தொடர்ந்து நடுவண் அரசை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். முட்டாள்தனமான அரசு என் மகனை எந்த அளவுக்கு தொந்தரவு செய்யப்போகிறது என்பதை பார்ப்போம். சோதனையில் எதுவும் சிக்கவில்லை. அதிகாரிகள் மனசாட்சியுடன் நடந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று சிதம்பரம் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.