Show all

ஒகிபுயலை பேரிடராக அறிவிக்க, நடுவண், மாநில அரசுகளுக்கு உயர் அறங்கூற்று மன்ற மதுரைக்கிளை கேள்வி

20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒகி புயலை பேரிடராக அறிவிக்கலாமா என்பது குறித்து, நடுவண், மாநில அரசுகளுக்கு உயர் அறங்கூற்று மன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஒகி புயலால் தமிழகம், கேரள மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குமரி மாவட்டத்தில்; பலத்த சேதம் கண்டுள்ளது.

இதற்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறன. இதற்கிடையில் மதுரையைச் சேர்ந்த ராஜன் என்பவர், உயர் அறங்கூற்று மன்ற மதுரைக் கிளையில் மனு பதிகை செய்தார்.

 

அதில், ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இறக்குதளம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை விசாரித்த அறங்கூற்றுவர்கள், இவ்விவகாரம் தொடர்பாக நடுவண், மாநில அரசுகள் இரண்டு கிழமைகளுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,628

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.