Show all

புதிய அமைப்பு! பாஜக, அதிமுகவினர் தவிர்த்து, பல்வேறு கட்சியினர் இணைந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட

பாஜக, அதிமுகவினர் தவிர்த்து, பல்வேறு கட்சியினர் இணைந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட, 'சீர்காழி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம்' என்ற புதிய அமைப்பு உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு சார்பில் விரைவில் போராட்டம் தொடங்கும் என அறிவித்துள்ளனர்.

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக மருத்துவக் கல்வியை களவாட நீட், தமிழக மண்ணைக் களவாட ஹைட்ரோ கார்பன் என்று வட இந்திய வாக்கு வங்கி பாஜக நடுவண் அரசு செயல் பட்டு வருகிறது. 

இதன் பொருட்டு, காவிரி கழிமுக மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நடுவண் அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஓஎன்ஜிசிக்கும் அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் இதற்கான பணிகளை தொடங்க உள்ளனர். இப்பணிகள் தொடர்ந்தால் கழிமுக மாவட்டங்களில் வேளாண்மை அழிந்து விடுவதுடன், நிலத்தடி நீரும் முற்றாக வீணடிக்கப் பட்டு, நிலங்கள் பாலைவனமாகி குடிநீருக்கே மக்கள் அவதிப்படும் நிலை உருவாகும். ஆகவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடந்து வருகிறது. பாஜக, அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக களத்தில் இறங்கி போராடி வருகின்றன.

இந்நிலையில் சீர்காழி பகுதியில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க, 'சீர்காழி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம்' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 

விரைவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கருத்தரங்கம், பொதுக்கூட்டம், பரப்புரை பயணம், ஆர்ப்பாட்டம் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவதென்று இந்த அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப் படுகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,175.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.