Show all

நெடுவாசல் போராட்டம்: வெற்றுச் சமாதானம் பேச வந்த ஹெச்.ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு

நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே வெற்றுச்  சமாதானம் பேச வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் தொடர்ந்து 18-வது நாளாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

     இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,

நெடுவாசல் மக்களை வெறுமனே சமாதானப்படுத்துவதற்காக பாஜக கட்சியின் தேசியச் செயலாளரான ஹெச்.ராஜா இன்று மாலை நெடுவாசலுக்கு வந்தார்.

     மக்களிடையே உரையாற்றிய அவர்,

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் நடுவண் அரசு திணிக்காது.

மக்கள் விரும்பாவிட்டால் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது.

எனவே தற்காலிகமாக மக்கள் இந்த போராட்டத்தைக் கைவிட வேண்டும். என கூறினார்.

     ஆனால் ஹெச்.ராஜாவின் இந்த வெற்றுப் பேச்சை ஏற்றுக்கொள்ள போராட்டக்காரர்கள் மறுத்துவிட்டனர்.

மேலும் அவருக்கு எதிரான பதாகைகளை காட்டி,

அவரை உடனடியாக அங்கிருந்து வெளியேறிட முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியிலிருந்து ஹெச்.ராஜா வெளியேறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.