Show all

வேதனை அளிக்கிறது! மோடி மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்திருக்கிறார்

     கடந்த 2 நாட்களாக தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

     இந்நிலையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

     பாக் நீரிணையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையாகும். எனினும், பாக் நீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.

     இன்னும் சில நாட்களில் கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய திருவிழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனை அளிக்கின்றது.

     மேலும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினையில் இலங்கைக்கு போதிய நிர்பந்தம் அளிக்கப்படவில்லை.

     எவ்வாறாயினும், மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே வழி எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.

     இதேவேளை, மீனவர்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி 3வது முறையாகவும் கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.