Show all

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் பெரியார் அண்ணா பெயர்கள்

வெள்ளையர்கள் இந்தியாவை விடுவித்துச் சென்ற போது இந்திய விடுதலையைக் கட்டமைக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்ட காங்கிரஸ்-

இந்தியாவின் அலுவல் மொழிகளாக அதிகாரம் உடைய தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்குரிய ஒட்டு மொத்த மொழி,பண்பாட்டு,கலாச்சார,இறையியல் அதிகாரத்தையும் புறந்தள்ளி-

வெள்ளையர்கள் வருகையின் போது இருந்து கொண்டிருந்த, ஏற்றதாழ்வு, பாகுபாடு, குழப்பங்கள் நிறைந்த பழைய மனுநீதி இந்தியாவை மீட்டமைக்கும் முயற்சியலேயே ஈடுபட்டது; காங்கிரஸ் வெள்ளையருக்கு எதிராகப் போராடியதும் அதற்காகவே என்று பெரியாருக்குத் தெரிந்திருந்தது.

காங்கிரஸ் கட்டமைக்கும் இந்திய விடுதலை-

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

  • பொதுமை இந்தியாவாக இருக்காது. என்று தெரிந்திருந்த தாலேயே ஆங்கிலேயர் இந்தியாவை விடுவித்த ஆகஸ்ட் 15ஐ துக்க நாளாக அறிவித்தார் பெரியார்.

பெரியார் எதிர்பார்த்தவாறாகவே

தமிழ், பிராகிருதம், சமற்கிருதம், உருது, பாரசீகம், அராபியம் ஆகியவைகளின் கலவை மொழியான மகமதியரால் பெயர் சூட்டப்பட்ட குளறுபடி காலத்தில் தோன்றிய கடிபோலி ஹிந்தியை மட்டும் தூக்கிப் பிடித்தது காங்கிரஸ் ஆளும் அரசு.

ஹிந்தி மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் தவிர்த்த இந்தியா முழுவதும் திணிக்கப் பட்டது.

பெரியாரும், அண்ணாவும் கடுமையாகப் போராடி தமிழகத்தை காங்கிரசிடமிருந்து மீட்டனர். தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள், தலைவர்கள் தோன்றிய போதும்

எந்த வடஇந்தியக் கட்சிகளும் தமிழகத்தில் நுழைந்து விடாத படியான ஒரு மாயக்கட்டாக பெரியார் அண்ணாவின் கருத்துக்கள் அமைந்திருப்பது இந்தியா முழுவதும் உள்ள எந்த அரசியல்வாதிகளுக்கும் வியப்பளிப்பதாக இருக்கிறது.

ஆழமான பழைய இந்திய மனுநீதி சட்ட ஆதரவுக் கட்சியான பாஜக-

சட்டம், அறங்கூற்று மன்றத்தின் துணையோடு,

புதியஇந்தியா புதியஇந்தியா என்று பொய்மாய்மாலங்களில் தமிழகத்தின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக மீத்தேன், நோட்டு, மாட்டு, நீட்டு என்று பிடுங்குகிற நிலையில்-

தமிழ்மக்கள் செய்வதறியாது, அண்ணாதுரை, பெரியார், ஆகியோரின் பிறந்த நாட்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக வலைதளங்களில் அவர்களைக் குறித்த நேர்மறையான கருத்துகளையும் விவாதங்களையும் நிகழ்த்தத் தொடங்கியுள்ளனர்.

இந்திய ஆளுமையிலிருந்து முற்றாக பாஜகவை அழித்தொழிக்கும் கடமைப் பாட்டை தொடங்கியாக வேண்டும் என்ற எண்ணமேஇதற்குக் காரணம்

தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் (செப்டம்பர் 17), பெரியார் பிறந்த நாள் (செப். 17), அண்ணா பிறந்த நாள் (செப். 15) ஆகிய மூன்று நாட்களையும் குறிக்கும் வகையில் முப்பெரும் விழா என்ற பெயரில் 1970-களின் பிற்பகுதியிலிருந்து மிகப் பெரிய விழா- பொதுக்கூட்டம் ஆகியவற்றை தி.மு.க. நடத்தி வருகிறது.

அந்தத் தருணத்தில் பாரதிதாசன், பெரியார், அண்ணா ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் தற்பொழுதோ, திமுக வெறுமனே ஆட்சிப் பொறுப்பு, அதிமுக எதிர்ப்பு என்று சுணங்கியுள்ள நேரத்தில் சமூக வலைதளங்களில் அண்ணா, பெரியார் ஆகியோரது பிறந்த நாட்களை ஒட்டி, அவர்களைப் பற்றிய நேர்மறையான கருத்துக்களும் விவாதங்களும் முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதிகம் காணப்பட்டன.

முன்னெப்போதையும்விட அதிக அளவில் தொலைக்காட்சிகளில் இந்த இரு தலைவர்களைப் பற்றிய குறும்படங்கள், சிறிய வாழ்கை வரலாற்றுத் தொகுப்புகள் ஒளிபரப்பாகின.

வலதுசாரி சக்திகள், பா.ஜ.க. போன்ற கட்சிகள்-

கழகங்கள் இல்லாத தமிழகம் என்று பேசிவரும் நிலையில், நாம் பெரியாரைப் பற்றிப் பேசியாக வேண்டிய நிலை இருக்கிறது. வழக்கமாக திராவிட இயக்கங்களை விமர்சிப்பவர்கள்கூட, தற்போது வலதுசாரி அபாயம் ஏற்பட்டிருப்பதாகக் கருதி, அண்ணாவைப் போற்றுவதோடு, மாநில சுயாட்சி போன்ற தத்துவங்களின் முக்கியத்துவம் குறித்தும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனாலும் தி.மு.க. இதனைப் போதுமான அளவில் பெரிய விழாவாக, மக்களிடம் பேசப்படும் தருணமாகச் செய்யவில்லை என்ற குறையும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் மக்கள் அண்ணாவை மீள்நிறுவு செய்ய தொடங்கிவிட்டார்கள்

தற்போது உள்ள தலைமுறைக்கு பெரியார், அண்ணா, தி.மு.க. ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து பெரிதாகத் தெரியாது. இந்தத் தலைவர்களாலும், இயக்கங்களாலும் மேலே வந்தோம் என்பதும் தெரியாது.

வலதுசாரி இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு வெற்றிடம் இருப்பதாகக் கருதி அதனை நிரப்புவதற்கு முயற்சிப்பதைப்போல காட்டிக்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில்

பாரதீய ஜனதா கட்சி உண்மையிலேயே பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ந்து வருவதாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் அடக்குமுறை தமிழகத்தை இருட்டடிக்கிற இந்தக் காலகட்டத்தில்

அதற்கான எதிர்வினையாகத்தான் தற்போது மீண்டும் அண்ணா, பெரியாரின் பாரம்பரியம் பேசப்படுவதைப் பார்க்க முடிகிறது.

இன்றைய சூழலை முன்வைத்து, தி.மு.கவோ திராவிடர் கழகமோ தங்கள் கொள்கைகளை முன்வைக்க வேண்டும். அது நடக்கவில்லை.

குறிப்பாக, அண்ணா காலத்துப் பொருளாதாரத்திற்கும் தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது. அதற்கு ஏற்றபடி திராவிட இயக்கத்தினர் புதிய கருத்துகளை முன்வைக்க வேண்டும். வெறும் அண்ணா பெயரைச் சொன்னால் போதாது.

இப்போது ஜிஎஸ்டி, நீட் தேர்வு போன்ற விசயங்களுக்கு எதிராக தமிழகத்தில் குரல்கள் ஒலித்தாலும் அடிப்படையான பிரச்சனை மாநில உரிமைகள் முடக்கப்படுவதுதான். ஆகவேதான் கூட்டாட்சித் தத்துவத்தைப் பேசிய அண்ணாவை இப்போது பேச வேண்டியிருக்கிறது.

தேசிய இன அடையாளங்களை பா.ஜ.க. ஒடுக்குகிறது. சமூக வலைதளங்கள்தான் அதற்கு வடிகால். ஆனால், தமிழ் சமூகத்தில், சமூக வலைதளங்களில் வேகத்தைப் பயன்படுத்தும் வகையில் தி.மு.க. இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

கருணாநிதி முடங்கியுள்ள வெற்றிடமாக மட்டும் இதைச் சொல்ல முடியாது. பல ஆண்டுகளாகவே கொள்கை ரீதியாகவும் அடையாள ரீதியாகவும் இந்தச் சரிவு நடந்துவருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.