Show all

ஆளுநருக்கு மடல்! உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தியாவது, நிராபராதி என நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் முருகன்

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'எனக்கு உண்மை அறியும் சோதனை நடத்தினால் தான் நிரபராதியா, இல்லையா என்ற உண்மையினை ஆளுநரும், நாட்டு மக்களும் அறிந்து கொள்ள முடியும். 

அதற்கான ஒரு தகுந்த உத்தரவினை ஆளுநர் வழங்கிட வேண்டும். எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் மிகுந்த வலிகளை தருகிறது. இறைவனின் பாதங்களில் எனதுயிரை முழுமையாக சரண் செய்ய சங்கற்பம் செய்து ஆகாரத்தினை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளேன். 

சிகிச்சை என்ற பெயரில் என்னை துன்புறுத்தாமல் இருக்க உரிய உத்தரவுகளை வழங்கிட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்து முருகன் ஆளுநருக்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டுள்ளார்.  

இதுதொடர்பாக ஆளுநருக்கு முருகன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். சிறையிலிருந்தபடியே கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ள விவரங்கள் வருமாறு: 

எங்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பிய ஆவணம் தங்களது ஒரு கையொப்பத்திற்காக 5 மாதங்களாக காத்துக் கிடக்கிறது. தயவுகூர்ந்து 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.