Show all

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாய்ப்பா!

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. 

களஆய்வின் மூலம் வெற்றி வாய்ப்புள்ள  பத்திலிருந்து பதினைந்து தொகுதிகளில் தினகரனின் அமமுக தனித்துப் போட்டியிட இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. மருத்துவர் இராமதாஸ் பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்பதை சூசகமாகத் தனது கீச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அதிமுக தனித்து போட்டியிடுமா? அல்லது பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பா.ஜனதா கூட்டணி அமையும் என நடுவண் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். நடுவண் அமைச்சரும்,  இந்தியக் குடியரசுக் கட்சி தலைவருமான ராம்தாஸ் அத்வாலே புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,039.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.