Show all

எது உண்மையான கிரண்பேடி! நேற்று மாட்டுக்காக அழுத கிரண்பேடி- இன்று மாட்டை அழவிடும் கிரண்பேடி.

இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டி ஒன்றின் மீது கிரண்பேடி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் அமர்ந்து ஆளுநர் மாளிகைக்குள் வலம் வந்தனர். இந்தப் புகைப்படத்தை குடும்ப விழா என்று தலைப்பிட்டு கீச்சுவில் பகிர்ந்தார் கிரண்பேடி.

29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சல்லிக்கட்டு திருவிழாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒரே புள்ளியில் நின்று குரலெழுப்பிய தருணம் அது. சென்னையில் இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரண்பேடி, சல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய திருவிழாவாக இருந்தாலும், காளைகள் துன்புறுத்தப்படுகின்றன. அதனால்தான் சல்லிக்கட்டுக்குச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உச்ச அறங்கூற்றுமன்றமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால் சல்லிக்கட்டு நடத்தத் தேவையில்லை என்று கூறினார்.

அப்போது அதே மேடையில் அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய ஆர்.ஜே பாலாஜி, நீங்கள் காலில் அணிந்திருக்கும் தோல் செருப்பு எதிலிருந்து வந்தது? மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்றுமதி செய்கிறார்களே அது சித்ரவதை இல்லையா? அந்த நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள் என்று கூறினார். கிரண்பேடியின் அந்தக் கருத்துக்கு எதிர்க்கருத்துக்கள் இணையத்தை தீயாக்கின. தமிழகம், புதுச்சேரியில் அவருக்கெதிரான போராட்டங்கள் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டன. 

தற்போது அதே கிரண்பேடி, ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதாக மாடுகளைத் துன்புறுத்தியுள்ளார். 2 மாடுகள் பூட்டப்பட்ட வண்டி ஒன்றின் மீது கிரண்பேடி மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் அமர்ந்து ஆளுநர் மாளிகைக்குள் வலம் வந்தனர். இந்தப் புகைப்படத்தை குடும்ப விழா என்று தலைப்பிட்டு கீச்சுவில் பகிர்ந்தார் கிரண்பேடி.

எதிர்க்கருத்துக்களால் இணையத்தைத் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இணைய ஆர்வலர்கள். 
“கிரண்பேடி அவர்களே சல்லிக்கட்டு விழாவை மாடு வதை என்று கூறிவிட்டு நோஞ்சான் மாட்டின் மீது இத்தனை பேர் அமர்கிறீர்களே... இதெல்லாம் மாடு வதை இல்லையா”,
“மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால்...” 
“கூடுதல் பளுவுக்கு வழக்கு கிடையாதா”, 
“அந்த மாடு அழுவது உங்கள் காதுகளில் கேட்கவில்லையா... இது உங்களுக்கே நியாயமா” என்ற வகையில் விமர்சனங்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

எது உண்மையான கிரண்பேடி! நேற்று மாட்டுக்காக அழுத கிரண்பேடி- இன்று மாட்டை அழவிடும் கிரண்பேடி. எப்போதும் தமிழர்கள் எதிர்நிலை போணுகிற பாஜக பிழைப்பாளியே கிரண்பேடி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,396.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.