Show all

அமைச்சர் ஜெயக்குமார்! அதிமுகவின் முந்திரிக் கொட்டை அனலில் வாட்டப் படுகிறது; நல்ல பருப்பு கிடைக்குமா? தீயில் கருகுமா!

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுகவில், எடப்பாடியாரை விட, பன்னீரை விட அதிகம் கிளிக்கப் படுபவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். படக்கருவிக்கு ஏற்ற கொழுக் மொழுக் அழகான உருவந்தான். அதற்காக அந்த விசயங்களிலும் ஓர் அமைச்சர் ஈடுபடலாமா? மக்கள் கொந்தளிக்கிறார்கள்.

அமைச்சர் ஜெயக்குமாரின் திருமண வாழ்க்கை முதல் சிந்து என்ற பெண் வரை என்று, ஜெயக்குமாரின் தம்பி சாந்தகுமாரே மனம் குமுறுகிறார். 

அரசியல்வாதிகள் ஊழல் துறையிலும், சாமியார்கள் அந்தப் பலான துறையிலும் ஈடுபட்டு வந்தார்கள். தற்போது அரசியல்வாதிகளே இரண்டு துறைகளையும் கையில் எடுத்து விட்டால் பாவம் சாமியார்கள் என்ன செய்வார்கள்.

ஆனால், சமூக வலைதளத்தில் தீயான கேளொலி, சென்னை மாநகராட்சி பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றுக்கு விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அந்தக் கேளொலியில் இருப்பது என்னுடைய குரல் இல்லை என்றும் பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் எனது பெயர் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். 

இந்தச் சூழ்நிலையில் ஜெயக்குமாரின் தம்பி சாந்தகுமார், 'முதல் முறையாக அ.தி.மு.க.வில் ஜெயக்குமார் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். அதன்பிறகு அவர் முழுமையாக மாறிவிட்டார். ஜெயக்குமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மர்மங்கள் உள்ளன. அவரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயக்குமார் குறித்து எனக்குத் தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடன் பிறந்த அண்ணன் குறித்து இப்படிப் பேச எனக்கே அவமானமாகத்தான் இருக்கிறது. குடும்பத்தினர் அவரைக் கண்டித்தபோதும் அவர் கேட்கவில்லை. ஜெயக்குமாருக்கும் வடசென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் குழந்தை பிறந்து இருப்பதாக பிறப்புச் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அமைச்சரும் அந்தப் பெண்ணின் அம்மாவும் பேசும் கேளொலியும் சமூக வலைதளத்தில் உலாவுகிறது. கேளொலி, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் குறித்து தெரிந்தவர்களுக்கு மட்டுமே அவரின் சுயரூபம் தெரியும். அதற்கு நேரடி சாட்சி நான்தான். அவர் தவறு செய்யவில்லை என்று என்னிடம் சொல்லச் சொல்லுங்கள். ஆதாரத்துடன் அவரின் முகத்திரையை கிழிப்பேன். 32 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன். தண்டையார்பேட்டையில் நடிகை ஒருவரின் பெயரைக் கொண்ட ஒரு பெண் குடியிருந்தார். அவரின் கணவர் காவல்காரராகப் பணியாற்றினார். அந்தப் பெண்ணிடம் விசாரித்தால் ஜெயக்குமார் எப்படிப்பட்டவர் என்று தெரியும்' என்கிறார். 

சாந்தகுமாரின் குற்றச்சாட்டுகள் குறித்து, ஏற்கெனவே விளக்கமளித்து விட்டதாக அமைச்சர் தரப்பினர் பதிலளிக்கின்றனர். செயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் கோலோச்சி வருகிறார் அமைச்சர் ஜெயக்குமார். சசிகலாவின் குடும்பத்தினரை கடுமையாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்ததால்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை  பழிவாங்கும் நோக்கத்தில் அவர் மீது தினகரன் தரப்பினர் பரப்புகின்றனர் என்கின்றனர் அதிமுக தரப்பினர்.

அதிமுகவின் முந்திரிக் கொட்டை அனலில் வாட்டப் படுகிறது ; நல்ல பருப்பு கிடைக்குமா? தீயில் கருகுமா! பொறுத்திருந்து பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,950.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.