Show all

சர்கார் படத்தின் புதிய தரவேற்றம்! போலந்தில் நான்கு திரையரங்குகளில் விஜய்யின் சர்கார் படம் திரையிடப்படும்

07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில், முன்னணி திரைமீனாக உலாவரும் நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் அரசியல் பற்றி தெரிவித்தக் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியது.

இதையடுத்து, படத்தின் விளம்பரம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நாளுக்கு நாள் வெளியாகும் சர்கார் தரவேற்றங்கள், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டேவுள்ளது. இப்படம் போலந்து நாட்டின் வார்ஷா, கிராகோவ், ரோக்லாவ், டான்ஸ்க் என 4 நகரங்களில் வெளியாக இருக்கிறது. அங்கு படம் வெளியாகும் நாள், விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,950.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.