Show all

தமிழ்நாடு முழுவதும் இன்று 12,525 ஊராட்சிகளில் கிராம அவைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தொழிலாளர் நாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம அவைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளில் இன்று கிராம அவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடியரசு நாள், தொழிலாளர் நாள், விடுதலை நாள், காந்தியின் பிறந்தநாள் ஆகிய நாட்களில் மட்டும் கிராம அவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. 

இதற்கிடையே முதல்வர் முக ஸ்டாலின் 110வது விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின்படி கூடுதலாக 2 முறை கிராம அவைக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி கூடுதலாக உலக தண்ணீர் நாள், உள்ளாட்சிகள் நாள் ஆகிய நாட்களிலும் கிராம அவைக் கூட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் தொழிலாளர் நாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம அவைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், கிராம அவைக் கூட்டம் பற்றியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக முகமூடி அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 

அதன்படி இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும் கிராம அவைக் கூட்டங்கள் நடந்தன. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்தனர். விவாதம் நடத்தப்பட்டது. மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல கிராம அவைக் கூட்டங்களில் மக்கள் அதிகளவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,235.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.