Show all

மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொள்ளவைத்த அடாவடி!

அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேராசிரியர்கள் பலர் பங்கேற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்னவேல் முன்னெடுத்த சம்ஸ்கிருதவெறிதன அடாவடி தமிழ்நாட்டின் பரபரப்பான பேசுபொருள் ஆகியுள்ளது.

18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களை சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்று கொள்ளவைத்த அடாவடி தொடர்பாக கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 250 பேரை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மதுரை மருத்துவ கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மருத்துவ கல்லூரி தலைவர் ரத்னவேல், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு வாசித்தனர். இது சமஸ்கிருத மொழியில் அமைந்த அடாவடி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து முதல்வர் ரத்னவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக துறை அடிப்படையாக விசாரணை நடத்தவும் மருத்துவ கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதால், தற்போது மதுரை அரசு மருத்துவக் கல்லூரி துணை முதல்வராக உள்ள தனலட்சுமி கூடுதல் பொறுப்பாக தலைவர் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,235.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.